திரைப்படமாகிறது மும்பை தீவிரவாதத் தாக்குதல்

By Staff

Aziz with Meghna Naidu
உலகை உலுக்கிய மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் திரைப்படமாகிறது. பாலிவுட் இயக்குநர் பி.சுபாஷ், இந்த சம்பவத்தை திரைப்படமாக எடுக்கவுள்ளார். டி.ராஜேந்தரின் வீராசாமி படத்தில் 2வது நாயகனாக நடித்த அஜீஸ், கஸாப் வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

மிதுன் சக்கரவர்த்தி நடித்த பல படங்களை இயக்கியவர் சுபாஷ். இவர்தான் மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தை திரைப்படமாக்கப் போகிறார்.

இப்படத்தில் முகம்மது அஜ்மல் கஸாப் கேரக்டரில் நடிக்க இளம் நடிகரான அஜீஸை தேர்வு செய்துள்ளார் சுபாஷ்.

அஜீஸ், துபாயில் பிறந்து, வளர்ந்தவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் மும்பை வந்து செட்டிலானார். அதன் பின்னர் அவர் நடிகரானார்.

சுபாஷ் தான் எடுக்கப் போகும் படத்துக்கு தாஜ் டெர்ரர் என பெயரிட்டுள்ளார். இப்படத்தின் நாயகனாக அஜீஸ் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து சுபாஷ் கூறுகையில், தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் உணர்ச்சிப்பூர்வமான பகுதியை எனது படம் சித்தரிக்கவுள்ளது. அந்த சம்பவத்தை நேரில் பார்த்த, அனுபவித்த பலர் மூலம் எனக்குக் கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளேன்.

தீவிரவாதிகளுடன் மோதி வீர மரணம் அடைந்த கமாண்டோ வீரர் மேஜர் உண்ணிகிருஷ்ணன் கேரக்டரில் நடிக்க ஷாருக் கானை அணுகியுள்ளேன். அதேபோல இன்னொரு கமாண்டோ கேரக்டருக்கு ஜான் ஆப்ரகாமை அணுகியுள்ளேன். இருவரும் சம்மதிப்பார்கள் என நம்புகிறேன்.

அதேபோல, என்.எஸ்.ஜி. தலைவர் கேரக்டருக்கு மிதுன் சக்கரவர்த்தியை அணுகியுள்ளேன் என்றார் சுபாஷ்.

இந்த அஜீஸ் வேறு யாருமல்ல, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான். டி.ராஜேந்தரின் வீராசாமி படத்தில் வந்த இளம் ஹீரோ இவர்தான். ஷீலாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதுதவிர பாலிவுட்டில், உஃப் கியா ஜடூ மொஹபத் ஹை படத்தில் வில்லனாகவும் தலை காட்டியுள்ளார்.

ஆங்கிலத்தில் தயாரான லவர்ஸ் லைக் அஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார். ஸ்வேதா சுபாஷின் ஜூம் படத்தில் தற்போது நாயகனாக நடித்துள்ளார். துபாயில் வைத்து இப்படத்தின் ஷூட்டிங் நடந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X