ரஜினி படத்தில் விஷ்ணுவர்த்தன்!

கன்னட சினிமாவின் அற்புதமான நடிகர்களில் ஒருவர் விஷ்ணுவர்த்தன். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல தமிழில் சூப்பர் ஹிட் ஆன வானத்தைப் போல படத்தின் கன்னட ரீமேக்கில், விஜயகாந்த் வேடத்தில் நடித்து அப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினார்.
80களில் வெளியான சிவாஜி - ரஜினி இணைந்து நடித்த விடுதலை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
இந்த நிலையில் எந்திரன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஷ்ணுவர்த்தன் நடிக்கவுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரான ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தமிழ் தவிர பல்வேறு மொழிகளில் இப்படத்தை வெளியிடவுள்ளது - கன்னடம் உள்பட.
Comments


Click it and Unblock the Notifications