'ஹரா' ஆனது சுல்தான்!

By Sudha

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான சுல்தான் - தி வாரியர் தலைப்பு ஹரா என்று மாற்றப்பட்டுள்ளது.

சௌந்தர்யா ரஜினியின் இயக்கத்தில், எந்திரனுக்கு முன்பே துவங்கிய இந்த அனிமேஷன் படத்தின் வேலைகள், எந்திரன் ரிலீசுக்காக தள்ளி வைக்கப்பட்டன. இப்போது சுல்தான் என்கிற ஹராவின் பணிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.

இந்தப் படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகளை கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார். மீதி அனிமேஷன் வடிவில் வரும் காட்சிகளை சௌந்தர்யா கவனிக்கிறார்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பாடல்களையும் ரவிக்குமாரே படமாக்குவார் என்று தெரிகிறது.

அவதார் படத்தின் தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி ஹராவின் அனிமேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. முழுப் படமும் 3 டி-யிலேயே வெளிவருவது ஹராவின் சிறப்பு. இந்தியாவில் வெளியாகும் முதல் 3 டி அனிமேஷன் படம் சுல்தான் என்கிற ஹராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X