twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி' குண்டு கல்யாணம்!

    |

    Nalla Nalla Pillaigalai Nambi
    குண்டு கல்யாணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. 'எண்பதுகளின் இறுதி வரை கல்லூரி ஹீரோவுக்கு தோழன் ப்ளஸ் காமெடியன் வேடமா... கூப்பிடுங்க குண்டு கல்யாணத்தை' என்பார்கள் தமிழ் சினிமா இயக்குநர்கள்.

    மெல்லத் திறந்தது கதவு படத்தில் கூட இவர் கல்லூரி மாணவராக நடித்திருப்பார். ரஜினியுடன் தில்லு முல்லு படத்திலும் கிச்சு கிச்சு மூட்டியிருப்பார் குண்டு கல்யாணம்.

    சின்னதும் பெரிதுமாக கிட்டத்தட்ட 500 படங்களைத் தாண்டிவிட்டார் கல்யாணம். இவர் தந்தை குண்டு கருப்பையா எம்ஜிஆர் படங்களில் நடித்தவர். தீவிர எம்ஜிஆர் விசுவாசியான குண்டு கல்யாணம் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளரும் கூட.

    இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். படத்துக்கு பெயர் கூட நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்றுதான் வைத்துள்ளார்.

    படம் குறித்தும் தான் இயக்குநரான விதம் குறித்தும் நேற்று நம்மிடம் நீண்ட நேரம் பேசினார் கல்யாணம்:

    "இயக்குநராவது என்பது இன்று நேற்று எழுந்த எண்ணமில்லை. நீண்ட நாள் ஆசை, கனவு. இந்த கனவுக்கு உயிரூட்டியவர் தயாரிப்பாளர் விஎஸ் ரிஷிராஜ். என்னுடைய எண்ணத்தை அறிந்ததும், கதை கூட கேட்கவில்லை. முதலில் ஆபீஸ் போட்டுக் கொடுத்துவிட்டு, அதன் பிறகுதான் கதை கேட்டார். அத்தனை நம்பிக்கை.

    இந்தப் படம் முழுக்க முழுக்க குழந்தைகளும் குடும்பத்தினரும் குதூகலமாகப் பார்க்கும்படியான நகைச்சுவைப் படம்.

    காட்டுக்குள் சுற்றுலா போகும் குழந்தைகள் அங்கே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். எப்படி வெளியே வந்தார்கள் என்பதுதான் ஒன்லைன்.

    காட்டுக்குள் மாட்டிக் கொண்டு நட்சத்திரங்கள் படும் அவஸ்தையை ரசிகர்கள் குலுங்கிக் குலுங்கி சிரித்தபடி பார்ப்பார்கள். அதற்கு நான் கியாரண்டி.

    சத்யமங்கலம், மேட்டூர் காடுகளில் பாதுகாப்பான ஏரியாவில் படப்பிடிப்பு நடத்தப்போகிறோம். என் மகள் ஜனனி உள்பட 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
    இவர்களைத் தவிர இரண்டு புதுமுகங்கள் நாயகன் நாயகியாகவும் நடிக்கிறார்கள். எல்லாருமே புதுசு என்பதால் கோச்சிங் கொடுத்துதான் ஷூட்டிங் ஆரம்பிக்கப் போறேன.

    இந்தப்படம் குழந்தைகளுக்கு நகைச்சுவையுடன் நல்ல படிப்பினையையும் கொடுக்கும். தலைவர் எம்ஜிஆர்ஆசியுடன் பெரிய வெற்றியைப் பெறும் என்கிறார் நம்பிக்கையுடன்.

    இந்தப் படத்தில் வனக்காவலர் வேடத்திலும் நடிக்கிறாராம் கல்யாணம்.

    முதல்படமே குழந்தைகள் படமாக எடுக்க முயன்றது ஏன் என்றோம்.

    ரொம்ப தெளிவாக இப்படிச் சொன்னார்:

    "எந்தக் குழந்தையும் தனியா படம் பார்க்க வரப்போவதில்லை. நிச்சயம் குடும்பத்தோடுதான் வருவாங்க. அதனால வெற்றி நிச்சயம்!".

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X