திருநங்கையாக விஷால்?

ஆனால் அவர் இப்போது இயக்கி வரும் அவன் இவன் குறித்து வரும் சில செய்திகள் படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைப்பதாக உள்ளன.
இளம் ஹீரோக்கள் விஷால், ஆர்யா நடிக்கும் இந்தப் படத்தில் இருவரும் அண்ணன் தம்பிகளாக நடிக்கிறார்கள் என்பது பாலாவே சொன்ன விஷயம்.
ஆனால் இருவரின் கேரக்டர்களும் மகா வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதாம். விஷால் இந்தப் படத்தில் சில காட்சிகளில் திருநங்கையாகத் தோன்றுவதாக தகவல் கசிந்துள்ளது.
அதேபோல, ஆர்யா முழுக்க முழுக்க பட்டிக்காட்டான் வேடமேற்றுள்ளாராம். கிராமங்களில் முன்பெல்லாம் வட்டவடிவமாக தலைமுடி வெட்டுவார்களே... அதுபோலத்தான் இந்தப் படத்தில் ஆர்யாவின் கெட்டப் இருக்குமாம். கிராமம் சார்ந்த கதை என்றாலும், தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத காட்சியமைப்புடன் இந்தப் படம் உருவாகியுள்ளதாம்.
சொன்னபடி 6 மாதங்களுக்குள் பாலாவால் படப்பிடிப்பு முடிக்க முடியாவிட்டாலும், எடுத்தவரை படு வித்தியாசமாக வந்துள்ளது அவன் இவன் என்கிறார்கள் பாலாவின் யூனிட்டைச் சேர்ந்தவர்கள். நிச்சயம் பொங்கலுக்குள் படம் வந்துவிடும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











