twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அபூர்வ ராகங்கள் டூ எந்திரன் வரை-ரஜினி திரை விழா-ஏஜிஎஸ் சினிமா ஏற்பாடு

    By Sudha
    |

    எந்திரன் திரைப்படம் உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்களை மகிழ்விக்க விரைந்து வருகிற நிலையில், ரஜினிகாந்த் திரைப்பட விழாவுக்கு ஏஜிஎஸ் சினிமா மல்டிப்ளக்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

    சூப்பர் ஸ்டாருக்கு அறிமுகம் தேவையில்லை. பாக்ஸ் ஆபீ்ஸ் பாட்ஷாவாக திகழும் அவருக்கு 6 முதல் 60 வரை ரசிகர்கள் கோடானு கோடி. அபூர்வ ராகங்களில் ஆரம்பித்த அவரது திரையுலக பயணம், எந்திரன் வரை எந்த தொய்வும் இல்லாமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது.

    அவரது படத்துக்கு அவர்தான் போட்டி. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு சாதனையுடன் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றவையாகும்.

    சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற நிலையிலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற மாபெரும் உருவத்திற்கு மாறிய அவரது பயணம் அனைவருக்கும் கற்றுத் தரும் பாடம்- இடை விடாத உழைப்பு என்பதே.

    தொழிலில் பக்தி, முயற்சியில் தீவிரம் என்பதை தாரகமாக கொண்டு செயல்படும் ரஜினிகாந்த்தின் எந்திரன் திரைக்கு வரும் நிலையில், ரஜினியின் புகழைப் பறை சாற்றும் வகையில், கெளரவிக்கும் வகையில், ஏஜிஎஸ் சினிமா (சென்னை அண்ணா நகர் அருகே புதிதாக உருவாகியுள்ள மல்டிபிளக்ஸ் திரை வளாகம்) ரஜினிகாந்த் திரைப்பட விழாவுக்கு ஏற்பாடுசெய்துள்ளது. செப்டம்பர் 24ம்தேதி இந்த திரை விருந்து தொடங்குகிறது.

    இந்த விழாவி்ல் வெள்ளிக்கிழமை அண்ணாமலை, சனிக்கிழமை மன்னன், ஞாயிற்றுக்கிழமை தளபதி, திங்கள்கிழமை குரு சிஷ்யன், செவ்வாய்க்கிழமை முரட்டுக்காளை, புதன்கிழமை முத்து, வியாழக்கிழமை சந்திரமுகி ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்படுகின்றன.

    திரையுலகின் பிரபல தயாரிப்புக் குடும்பமான கல்பாத்திக் குடும்பத்தைச் சேர்ந்த ஏஜிஎஸ் குழுமத்துக்கு உடமையானதுதான் இந்த ஏஜிஎஸ் சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X