பிராட் பிட் - அனில் அம்பானி கூட்டாக படங்கள் தயாரிக்க ஒப்பந்தம்!

இதன் முதல்கட்டமாக அனில் அம்பானியின் பிக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் பிராட் பிட்டின் பிளான் பி எண்டர்டெயின்மெண்டும், வீடியோ கேம் தயாரிப்பில் புகழ்பெற்ற கேப்காமுடன் இணைந்து புதிய வீடியோ கேம்களை வெளியிட்டுள்ளன. இதற்கு டார்க் வொய்ட் (Dark Void) என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த வீடியோ கேமை ரிலையன்ஸுடன் இணைந்து திரைப்படமாக்கும் உரிமையைப் பெற்றுள்ளார் பிராட் பிட்.
மைக்ரோசாப்ட் பிளேஸ்டேஷன் -3-ல் இதை விளையாடலாம். உலகப் புவியியலின் மர்மதேசமாகத் திகழும் பெர்முடா முக்கோணம் எனும் பகுதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கேம், திரைப்படமாக வந்தால் பெரும் வெற்றியைப் பெறும் என இப்போதே எதிர்ப்பார்ப்பு எகிறுகிறது.
இதுகுறித்து ரிலையன்ஸ் பிக் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அமித் கன்னா கூறுகையில், "இந்த வீடியோ கேமை பிராட் பிட், கேப்காம் மற்றும் பிக் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இன்னும் பல திட்டங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன. ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது" என்றார்.


Click it and Unblock the Notifications











