ஒருவழியாக கமல் ஜோடியானார் அனுஷ்கா!
விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி யார் என்பதில் நீடித்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
தெலுங்கு - தமிழில் முன்னணியில் உள்ள அனுஷ்காதான் விஸ்வரூபம் பட நாயகி.
கமல் இயக்கி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் விஸ்வரூபம். இந்தப் படத்தில் ஆரம்பத்தில் சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென படத்திலிருந்து விலகிக் கொண்டார்.
படம் துவங்க மிகவும் தாமதமாகிக் கொண்டிருப்பதால், இந்தி வாய்ப்புகள் பறிபோவதாகக் கூறி அவர் விலகிக் கொண்டார்.
எனவே தீபிகா படுகோன் உள்பட பலரிடமும் பேசி வந்தனர். இந்த நிலையில் இப்போது அனுஷ்காவை நாயகியாக்கியுள்ளனர்.
படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. ஐரோப்பா மற்றும் கனடாவில் இந்தப் படத்துக்காக பிரமாதமான லொகேஷன்களை பார்த்துவிட்டு வந்துள்ளார் கமல்ஹாஸன்.
Comments


Click it and Unblock the Notifications