'கிசுகிசு' அலுத்துப் போச்சு... செலீனா

By Staff

Celina Jailtly
கிசுகிசுக்களை கேட்டுக் கேட்டு எனக்கு அலுத்துப் போய் விட்டது என்கிறார் பாலிவுட் கவர்ச்சிப் புயல் செலீனா ஜெட்லி.

இம்ரான் ஹஸ்மி முதல் பல பாலிவுட் ஹீரோக்களுடன் இணைத்து அடுத்தடுத்து கிசுகிசுக்கப்பட்டவர் செலீனா. இதற்கெல்லாம் பெரும்பாலும் பதில் சொல்லாமல்தான் இருந்து வந்தார் செலீனா. ஆனால் தன்னைப் பற்றி கொஞ்சம் ஓவராகவே வதந்திகள் கிளம்புவதாக அவர் இப்போது பீல் செய்கிறாராம்.

இதனால் கிசுகிசுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இதெல்லாம் எனக்கு அலுத்துப் போய் விட்டது. என்னைப் பற்றி எழுத வேறு ஒன்றுமே இல்லையா என்று பெட் அப் ஆகி கேட்கிறார் செலீனா.

ஜவானி திவானி படத்தில் நடித்தபோதுதான் இம்ரான் ஹஸ்மியுடன் கிசுகிசுக்கப்பட்டார் ெசலீனா. பின்னர், மனி ஹெய்ன் தோ ஹனி ஹெய்ன் படத்தில் கோவிந்தாவுடன் இணைந்து நடித்தபோது அவருடன் சேர்த்துப் பேசப்பட்டார்.

இப்போது துஷார் கபூருடன் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறார் செலீனா. ஆனால் இந்த இணைப்புகள் எல்லாம் வெறும் வதந்தியே. எதிலுமே உண்மை இல்லை என்கிறார் செலீனா. எனக்கு நல்ல நண்பர்கள்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் துஷார் கபூரும்.

கோல்மால் ரிடர்ன்ஸ் படத்தில் நடித்தபோதுதான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இது நல்ல நட்பு. அசிங்கமானதல்ல. ஏன்தான் இப்படி தப்பு தப்பாக இணைத்துப் பேசுகிறார்களோ என்று அலுத்துக் கொள்கிறார் செலீனா.

உண்மையில் எனக்கு இதுவரை எந்தக் காதலரும் இல்ைல. காதலர் இல்லையே என்ற வருத்தத்தில் நான் இருக்கிறேன். இந்தநிலையில் என்னைப் போய் காதலிப்பதாக பலருடனும் இணைத்துப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

காதல்தான் இல்லையே தவிர மற்ற அனைத்துமே எனக்கு கிடைத்திருக்கிறது. வாழ்க்கை சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது. எனவே கிசுகிசுக்கள் குறித்து கவலைப்பட எனக்கு நேரமே இல்ைல என்கிறார் படு கேஷுவலாக செலீனா.

நம்புறோம!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X