சிரஞ்சீவிக்காக 'அஸ்வமேத யாகம்'!!

By Staff

{image-chiranjeevi-iday (8)250_23082008.jpg tamil.filmibeat.com}ஹைதராபாத்: தனது 54வது பிறந்த நாளை, ஹைதராபாத்தில் தாயாருடன் கொண்டாடினார் அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ள தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

அரசியல் களத்தில் புகுந்துள்ளதால், இனிமேல் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவழிக்க முடியாது என்பதாலோ என்னவோ தனது பிறந்த நாளை தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சிரஞ்சீவி கொண்டாடினார்.

தனது பிறந்த நாளையொட்டி வாழ்த்துவதற்காக ரசிகர்கள் ஹைதராபாத்துக்கு வர வேண்டும். மாறாக தங்களது வசிப்பிடங்களில் மரக் கன்றுகளை நட வேண்டும் என சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இருப்பினும் ஆந்திரா முழுவதும் ரசிகர்கள் கேக் வெட்டி தங்களது தலைவரின் பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடினர்.

இதுதவிர ரத்ததானம், நோயாளிகளுக்கு பால், பழம் வழங்குவது, முதியோர் இல்லங்களுக்கு உதவிகள் எனவும் ரசிகர்கள் சிரஞ்சீவி பிறந்த நாளைக் கொண்டாடினர்.

காஞ்சியில் யாகம்:

இதற்கிடையே, நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிரஞ்சீவிக்காக சிறப்பு சஹஸ்ரசண்டி யாகம் நடத்தப்பட்டது. இதில் சிரஞ்சீவி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் காமாட்சி அம்மன் கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். சென்னையிலிருந்து தெலுங்கு சங்கங்களின் பிரதிநிதிகளும் வந்திருந்தனர். இதுதவிர பல்வேறு தெலுங்கு மற்றும் பிற மொழி டிவின நிருபர்களும், வீடியோகிராபர்கள், பத்திரிக்கை புகைப்படக்காரர்களும் திரண்டிருந்தனர்.

இருப்பினும் சிரஞ்சீவி கடைசி வரை வரவில்லை. அவர் தாயாருடன் பிறந்த நாள் கொண்டாடியதால் வர முடியவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

அஸ்வமேத யாகம்:

இதற்கிடையே, அந்தக் காலத்து ராஜாக்கள் நடத்திய அஸ்வமேத யாகம் போல, சிரஞ்சீவிக்காக ஒரு யாகத்தை நடத்த திருத்தணியைச் சேர்ந்த தமிழ்நாடு தெலுங்கு மக்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்காக கோவையிலிலிருந்து வெள்ளை நிறக் குதிரை ஒன்றை தேர்வு செய்துள்ளனராம். இந்தக் குதிரயை செப்டம்பர் மாதம் ஒரு வண்டியில் ஏற்றி ஆந்திரா முழுவதும் சுற்றி வரச் செய்யவிருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X