பெரிய திரை ஏமாற்றம்: சின்னத்திரையில் கொண்டாட்டம்!

By Staff

Nayanatara with Rajini
இந்த ஆண்டு பெரிய திரை ஏமாற்றினாலும், சின்னத்திரை ஏமாற்றவில்லை சினிமா ரசிகர்களை.

தீபாவளிக்கு ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரிலீசாகும் ஒரே படம் அஜீத் நடித்த ஏகன்தான். அதற்கடுத்த நிலையில் சேவல் ரிலீசாகிறது. கடைசி நிமிடத்தில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளது.

இந்தப் படம் நவம்பர் 14-ம் தேதி சோலோவாக ரிலீசாகிறது.

மற்றபடி அஜந்தா, தீயவன் மற்றும் மேகம் என சில படங்கள் ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக, இந்த தீபாவளிக்கு பெரிய திரையில் பெரிய அளவில் தீபாவளி வாண வேடிக்கை எதுவும் இல்லை. ஆனால் சின்னத்திரை ஏமாற்றவில்லை ரசிகர்களை.

சன் டிவியில் சந்திரமுகி:

அக்டோபர் 27ம் தேதி சன் டிவியில் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் படமான சந்திரமுகி ஒளிபரப்பாகிறது. வசூலிலும், அதிக நாட்கள் ஓடிய வகையிலும் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்திய படம் இது.

இந்தப் படத்தைத் தவிர, பிரபலங்களின் சிறப்புப் பேட்டிகள், தீபாவளி திரைப்பட முன்னோட்டங்கள், சிறப்பு புதுப்படப் பாடல்கள் என திகட்டத் திகட்ட விருந்து படைக்கிறது சன் டிவி. இக்குழுமத்தின் கேடிவி மற்றும் காமெடி திரையிலும் ஏராளமான தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

கலைஞர் டிவியில் பில்லா திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அஜீத்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இந்தப் படம் அமைந்தது.

ஜெயா டிவி மட்டும் சும்மா இருக்குமா... கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை ஒளிபரப்புகிறார்கள்.

புதிதாக களமிறங்கியிருக்கும் ஜீ டிவியும் தன் பங்குக்கு தீபாவளிக்கு படங்களை ஒளிபரப்புகிறது. பிரசன்னா நடித்த புதுப்படமான சாது மிரண்டா படத்தை ஒளிபரப்புகிறார்கள். இதைத் தவிர மேலும் 5 படங்களும் ஒளிபரப்பாக உள்ளன இந்த சேனலில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X