பேசவே முடியாத அபிநயாவின் நடிப்பு அபாரம்-அமீர் புகழாரம்

சசிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஈசன். இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அமீர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பாலாவிடம் இருந்து நான் வந்தேன். இதோ என்னிடமிருந்து சசிகுமார். இது நான் ஆசைப்பட்ட ஒன்று. சசி இன்றைக்குப் பெரிய இயக்குநராக இருப்பதில் பெரும் மகிழ்ச்சியடையும் முதல் ஆள் நான்தான். அதுவும் அவர் வெற்றிப் பட இயக்குநராக இருப்பதில் இன்னும் மகிழ்ச்சி.
நான் சசியை பார்த்து வியந்து போன விஷயங்களில் ஒன்று, சமுத்திரகனியும், சசிகுமாரும் இணைந்து அபிநயா என்ற பெண்ணை நடிக்க வைத்த விஷயம்தான். காது கேளாமல், பேச முடியாத ஒரு பெண்ணை நடிக்க வைத்து ரசிகர்களின் ரசனைக்கு உள்ளானார்கள்.
இந்த விஷயம் இந்திய சினிமா வரலாற்றில் எந்த இயக்குநரும் செய்யாத ஒன்று. இதை நாம் ஏன் செய்யாமல் விட்டு விட்டோம் என எண்ணுவது உண்டு என்றார் அமீர்.
விழாவில் இயக்குநர் கே.பாலச்சந்தர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











