'பாண்ட்'-ஐ வீழ்த்தும் தோஸ்தானா!

By Staff

Dostana
அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரகாம் இணைந்து நடித்துள்ள தோஸ்தானா, வெளிநாடுகளில், ஜேம்ஸ் பாண்ட் படமான குவான்டம் ஆப் சொலஸுக்கு நிகராக சூப்பராக ஓடுகிறதாம். வசூலையும் வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறதாம்.

இந்த ஆண்டில் வெளிநாடுகளில் வெளியான பாலிவுட் படங்களிலேயே தோஸ்தானாவுக்குத்தான் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

நவம்பர் 14ம் தேதி தோஸ்தானா உலகம் முழுவதும் வெளியானது. பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் தோஸ்தானா கலக்கு கலக்கு என கலக்கிக் கொண்டிருக்கிறதாம்.

இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், இப்படம் ஜேம்ஸ் பாண்ட்டின் குவான்டம் ஆப் சொலஸ் படத்தை முந்திக் கொண்டிருக்கிறதாம்.

புதுமுகமான தருண் மனுஷ்கானி இயக்கத்தில் உருவான படம் தோஸ்தானா. இங்கிலாந்தின் டாப் 10 பட வரிசையில் தோஸ்தானாவுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது.

அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரகாமுடன், பிரியங்கா சோப்ராவும் இணைந்து கலக்கியுள்ள இப்படம், முதல் வாரத்தில் ரூ. 2கோடி வசூலை இங்கிலாந்தில் அள்ளியுள்ளது. அங்கு மொத்தம் 43 திரைகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திரையிலும் இப்படத்திற்கு 7,946 பவுண்டு வசூல் கிடைத்துள்ளதாம். ஜேம்ஸ் படத்தின் வசூல் 9,407 பவுண்டுள் ஆகும்.

அமெரிக்காவில் 74 திரைகளில் வெளியாகியுள்ள தோஸ்தானா, அங்கு ரூ. 3.20 கோடியை அள்ளியுள்ளது. ஒரு திரைக்கு தோஸ்தானாவின் வசூல் 8724 டாலர்களாகும்.

ஆஸ்திரேலியாவிலும் தோஸ்தானா சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

மேற்கு ஆசியாவையும் தோஸ்தானா விட்டு வைக்கவில்லை.

இதுதவிர பாகிஸ்தானும் இப்படத்திற்கு செமத்தியான வரவேற்பாம்.

வெளிநாடுகளில் கலக்கிக் கொண்டிருக்கும் தோஸ்தானாவின் இந்திய வசூல், முதல் வாரத்திதலேயே ரூ. 28 கோடியைத் தாண்டி விட்டதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X