எந்திரன்: ரஜினி-ஐஸ் ஸ்டில்கள் லீக்!

By Staff

Rajini with Aishwarya Rai
ரஜினி- ஐஸ்வர்யா ராய் நடிக்கும் எந்திரன்- தி ரோபோ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஐஸ்வர்யா ராய் பச்சனும் பெரு நாட்டின் சரித்திரப் பிரசித்தி பெற்ற மாச்சு பிக்குவில் டூயட் பாடுவதுபோல காட்சிகள், படப்பிடிப்புக் குழுவினருடன் இருக்கும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

மொத்தம் 5 ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. இவை ஐந்துமே அதிராகப்பூர்வமானவை அல்ல. ஆனால் வழக்கமான போட்டோஷாப் தந்திரம் எதுவும் இப்படங்களில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக ஒரேயொரு ஸ்டில் மட்டுமே, போஸ்டர் டிசைன், வெளியிடப்பட்டிருந்தது. இதில் கிராபிக்ஸ் செய்யப்பட்ட ரஜினி படம் இடம்பெற்றிருந்த்து.

வேறு எந்த தகவல்களும், புகைப்படங்களும் மீடியாவுக்கு தரப்படவில்லை. இத்தனைக்கும் 4 போட்டோ செஷன்களை ரஜினி -ஐஸ்வர்யா ராயை வைத்து எடுத்திருந்தார் இயக்குநர் ஷங்கர்.

படத்தின் எந்த ஸ்டில்களும் வெளியில் தெரியவே கூடாது என்பதில் மிக கண்டிப்பாக இருந்தார் ஷங்கர். இதற்காகவே செட்டில் யாரும் செல்போன் உபயோகிப்பதைக் கூட தடை செய்திருந்தார்.

ஆனால் இவற்றையெல்லாம் மீறி, எந்திரன்- தி ரோபோ ஸ்டில்களை பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது.

ரஜினியின் சிவாஜி படத்துக்கும் இதே போலத்தான் கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. ஆனால் படத்தின் முக்கிய ஸ்டில்கள், பாடல்கள் போன்றவை முதலில் இணைய தளங்களில் வெளியான பிறகுதான், அதிகாரப்பூர்மாக வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X