ஒரு வழியாக 'கிடைத்தது' வேங்கை!

ஹரியின் இயக்கத்தில் அருவா என்ற பெயரில் துவங்கவிருந்த தனுஷ் படம், பின்னர் வேங்கை எனப் பெயர் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது.
ஆனால் அடுத்த சில தினங்களில் அதே தலைப்பில் படம் இயக்கப் போவதாக பாலா என்ற புதிய இயக்குநர் அறிவிப்பை வெளியிட, ஏக டென்ஷனாகிவிட்டார் ஹரி.
இந்தத் தலைப்பை தனக்குத் தந்துவிடுமாறு பல வழியிலும் அந்த புதிய இயக்குநரை ஹரி மிரட்டியதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், அந்தப் புதிய இயக்குநரிடம் 'பேச்சு' நடத்தி, தரவேண்டியதைத் தந்து வேங்கை தலைப்பை ஹரி பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
தலைப்புப் பிரச்சினை தீர்ந்த தெம்பில் இப்போது வேங்கை படத்தின் படப்பிடிப்பை தனுஷ் - தமன்னாவை வைத்துத் துவங்கிவிட்டார் ஹரி. முழுக்க முழுக்க கிராமத்து ஆக்ஷன் கதையாக வருகிறது வேங்கை.
Comments


Click it and Unblock the Notifications