twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேராண்மையில் ஹாலிவுட் ரோலண்ட் கிக்கிங்கர்!

    By Staff
    |

    Roland kickinger
    ஜெயம் ரவி நடிக்கும் பேராண்மை படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ரோலண்ட் கிக்கிங்கர்.

    பேராண்மை படம் இந்தியாவுக்கு ஊடுருவும் வெளிநாட்டுத் தீவிரவாதி ஒருவரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாத்திரத்துக்கு ஒரு வெளிநாட்டு நடிகரே நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் ரோலண்ட் கிக்கிங்கரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    டெர்மினேட்டர் படத்தின் நான்காம் பாகத்தில் அர்னால்டுக்கு பதில் நடிப்பவர் இருவர்தான்.

    இதுகுறித்து இயக்குநர் எஸ்பி ஜனநாதன் கூறியதாவது:

    6 அடி 5 அங்குல உயரம் கொண்ட ரோலண்ட், 130 கிலோ எடை கொண்டவர். 1995-லேயே உலக அழகனாகப் பட்டம் பெற்றவர். அவரை சற்று சந்தேகத்துடன்தான் அணுகினோம். ஆனால் சென்னை மற்றும் தமிழ் சினிமா பற்றி அவர் தெரிந்து வைத்திருந்ததால் உடனே ஒப்புக் கொண்டார்.

    ரொம்ப மரியாதையான மனிதர். 40 நாட்கள் நடித்தார். ஆனால் எந்தத் தொந்தரவும் கொடுக்காத அருமையான கலைஞராக நடந்து கொண்டார். தினமும் அவருக்குத் தேவை 50 முட்டைகளின் வெள்ளைக் கரு, ஓட்ஸ் கஞ்சி, உப்பு- இனிப்பு இல்லாத வேக வைத்த காய்கறிகள்தான் சாப்பிடுகிறார்.

    அவருக்கு சிகரெட், மதுப்பழக்கம் கிடையாது. இந்தப் பழக்கத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்பவராம் அவர்.

    மாலை நேரத்தில் 20 முட்டைகளின் வெள்ளைக் கரு, வேக வைத்த காய்கறிகள் மற்றும் மீன்தான் அவர் உணவு. காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு, சரியான நேரத்துக்கு ஷூட்டிங்குக்கு வந்துவிடுகிறார்.

    ரொம்ப அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு இந்தியாவில் அவருக்கு எக்கச்சக்க தேவை இருக்கும்.

    படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு மிக நெருக்கமான நண்பராகி விட்டார், என்றார் ஜனநாதன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X