ஜெனீபர் லோபஸுக்கு இரட்டை குழந்தை

நியூயார்க்கில் உள்ள லாங் ஐலண்ட் மருத்துவமனையில் லோபஸுக்குப் பிரசவம் நடந்தது. அவருக்கு ஒரு ஆணும், ஒரு பெண்ணுமாக இரட்டைக் குழந்தை பிறந்துள்ளன.
38 வயதாகும் லோபஸுக்கு நடந்த முதல் பிரசவம் இது, அதிலும் இரட்டைக் குழந்தைகள் என்பதால் லோபஸும், அவரது சல்சா பாடகர் கணவரான மார்க் அந்தோணியும் பெரும் சந்தோஷமடைந்துள்ளனர்.
மார்க்குக்கு ஏற்கனவே இரு முறை திருமணமாகி விட்டது. அந்தத் திருமணங்கள் மூலம் அவருக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். ஆனால் லோபஸுக்கு இதுவே முதல் குழந்தைகள் ஆவர்.
லோபஸ்-மார்க் தம்பதிகளின் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடும் உரிமையை பீப்பிள் பத்திரிக்கை 6 மில்லியன் டாலர் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











