ஆதவன் நூறாவது நாள் விழா

சூர்யா - நயன்தாரா -வடிவேலு நடித்து, கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படம் இது.
இன்று மாலை 6.30 மணிக்கு அடையாறு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடக்கும் இந்த விழாவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம நாரா யணன் தலைமை வகிக்கிறார்.
விழாவில் கமல்ஹாஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நயன்தாரா, சூர்யா, வடிவேலு உள்ளிட்ட கலைஞர்களுக்கு கேடயம் வழங்குகிறார்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு நடக்கும் நூறாவது விழா என்பதால் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், செண்பகமூர்த்தி, அர்ஜூன் துரை, நிகில் முருகன் ஆகியோர் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications