ரூ.100 கோடியில் மர்மயோகி - ஜூலை 13-ல் பூஜை!

By Staff

Kamal Hassan
தனது அடுத்த கனவுப் படமான மர்மயோகியின் வேலைகளில் மும்முரமாகி விட்டார் உலக நாயகன் கமல்ஹாசன்.

பிரமிட் சாயமிரா நிறுவனத்துக்காக சுமார் 100 கோடி ரூபாய் செலவில் முதல் பிரதி அடிப்படையில் கமல் தயாரிக்கும் படம் இது. இம்முறை அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கப் போகிறார்.

ஜூலை 13-ம் தேதி இந்தப் படத்தை அதிகாரப் பூர்வமாக அவர் துவங்கப் போவதாக தெரிகிறது. ஆனால் இங்கல்ல... மும்பை கிராண்ட ஓட்டலில் பிரமாண்ட விழாவில் மர்மயோகியைத் துவக்குகிறார்.

இந்தி பெல்ட்டை கலக்கும் வகையில், மர்மயோகியை இந்திப் பட உலக ஜாம்பவான்களைக் கொண்டே பிரமாண்டமாகத் துவக்க விரும்புகிறார் கமல்.

ஆரம்பத்தில் இப்படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாகத்தான் கமல் கூறி வந்தார். இப்போது தயாரிப்பு சாய்மிராவுக்கு மாறியிருக்கிறது.

தனது கனவுப் படமான மருதநாயகத்தைத்தான் சற்றே மாற்றி மர்மயோகியாக சரித்திரப் பின்னணியில் அவர் எடுக்கப் போகிறார் என்கின்றன நம்பத் தகுந்த வட்டாரங்கள். எனவே பட்ஜெட் தொகை ரூ. 100 கோடிக்கு மேலும் போகக்கூடும் என எதிர்பார்க்கிறது சாய்மிரா நிறுவனம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, நீங்கள் நினைத்த மாதிரி படத்தை எடுங்கள் என்று கமலிடம் கூறிவிட்டார்களாம் சாய்மிரா நிறுவனத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X