விவாகரத்து கேட்டு கணவரைப் பிரிந்த காவ்யா மாதவன்!

அப்படி ஒரு வேகம்... விவாகரத்து பெறுவதில்.
மிக மிக சமீபத்தில் திருமணமான ஒரு நடிகைக்கும் அவர் கணவருக்கும், திருமணமாகிய மூன்றாவது நாளே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம். இதுபற்றி கருத்து தெரிவித்த ஒரு மூத்த பத்திரிகையாளர் "ஹனிமூன் முடித்துவிட்டு வந்து அந்த நடிகை விவாகரத்து பற்றி அறிவித்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்" என்றார்.
கடந்த பிப்ரவரியில் திருமணமானவர் நடிகை காவ்யா மாதவன். பிப்ரவரி 5-ம் தேதி கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இவருக்கும் நிஷால் சந்த்ரா என்பவருக்கும் திருமணம் நடந்தது.
ஒரு மாத காலம் கணவருடன் குவைத்திலும் தங்கியிருந்தார் காவ்யா. இப்போது, கணவரைப் பிரிந்து எர்ணாகுளத்தில் உள்ள தனது வீட்டில் தனித்து வசிக்கிறாராம்.
ஒரு வருடம் பிரிந்து வாழ வேண்டும் என காவ்யாவின் வழக்கறிஞர் சொன்னதால் இந்த தனி வாசமாம். ஆறுமாதம் கழித்து நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு மனுப்போடவும் முடிவு செய்துவிட்டாராம்.
இடையில் நடந்தது என்ன?
காவ்யாவின் கணவர் மற்றும் அவரது சகோதரர்களின் நடத்தை சரியில்லையாம். எனவே உடனடியாக பிரிந்து வந்துவிட்டாராம் காவ்யா.
இப்போது வழக்கம்போல திரைப்பட வாய்ப்புகளுக்கு தூது விட்டுக் கொண்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











