twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிறந்தது திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்-உண்ணாவிரதம்

    By Staff
    |

    Kollywood Strike
    சென்னை: தமிழ்த் திரையுலகத்தினர் ஒன்று திரண்டு, திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பினைத் தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் இன்று பிலம் சேம்பரில் உண்ணாவிரதம் நடந்தது.

    பிலிம்சேம்பர் வளாகத்தில் காலை 9 மணிக்குத் துவங்கிய இந்த உண்ணாவிரதம் மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இதில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பாலு மகேந்திரா, இயக்குநர்கள் அமீர், நடிகர்கள் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இயக்குநர் சீமான் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார். அவர் வந்த போது பெரும் ஆரவாரம் எழுந்தது.

    இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சரவண சுப்பையா, சேரன், மணிவண்ணன், வெற்றி மாறன், ஹரி, பிரவீன்காந்த், சுசிகணேசன், சசி, சமுத்திரகனி உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். நடிகர்கள் கஞ்சா கருப்பு, பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    பார்வையாளர்களாக வரும் பொது மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களும் வருவார்கள் என போராட்டக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

    உண்ணாவிரத முடிவுக்குப் பின்னர் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என பாரதி ராஜா அறிவித்துள்ளார்.

    மிகக் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டாலும், திரையுலகினர் திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

    அனைவரும் உணர்ச்சிப் பெருக்கோடும், கருப்புச் சட்டைகள் அணிந்தும் காணப்பட்டனர்.

    சமீபத்தில்தான் இலங்கையில் போரை நிறுத்தி விட்டு சோனியா காந்தி தமிழகத்திற்கு வர வேண்டும். அதை விட்டு விட்டு எழவு வீட்டில் வந்து ஓட்டு கேட்கக் கூடாது. இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டங்களில் திரையுலகம் ஈடுபடும் என எச்சரித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X