ஹாக்கியை மையப்படுத்தி எடுக்கப்படும் 'குமிழி'!
விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைப்பவர்கள் கவனம் திசை மாறினால் அவர்கள் வாழ்க்கை எந்த அளவு மாறிப் போகும் என்பதை ஹாக்கி விளையாட்டின் பிந்னணியில் அழுத்தமாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.
படத்தை இயக்கியிருப்பவர் ராத்திகா. பெயரைப் பார்த்து பெண் இயக்குநர் என்று முடிவு செய்து விட வேண்டாம். இவர் ஆண்தான்.
கிராமங்களில் உள்ள இளைஞர்கள் எந்த அளவு திறமையுடன் விளையாடுகிறார்கள், அவர்கள் திறமை வெளியில் தெரியாமலேயே போகும் அவலம் குறித்தெல்லாம் இந்தப் படத்தில் நிறையவே சொல்லியிருக்கிறாராம் இயக்குநர்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் அத்தனை பேருமே புதியவர்கள்தான். தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலரையும் இதில் நடிகர்களாக்கிவிட்டிருக்கிறார் ராத்திகா.
கூடவே நிஜமான ஹாக்கி வீரர்கள் சிலரையும் நடிக்க வைத்திருக்கிறார், காட்சிகளுக்கு நம்பகத்தன்மை தருவதற்காக. 9 காமிராக்களைப் பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இசை:கண்ணன் (தமிழ்ப் படம் புகழ்). சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்துள்ளார்.
சிவா விஷ்ணு பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படம் விரைவில் வெளிவருகிறது.


Click it and Unblock the Notifications












