மாப்பிள்ளை Vs வானம்!!
அஜீத் - விஜய் மாதிரி இப்போது தனுஷ் - சிம்பு என்ற ஒப்பீடு தொடர்கிறது. இருவரின் படங்களும் இணைந்து வெளியாகாவிட்டாலும், அந்த ஆண்டில் அதிக வெற்றிகளை தந்தது யார் என்ற பேச்சு கிளம்பிவிடுகிறது.
இந்த முறை இருவரது படங்களும் நேரடியாகவே மோதிக் கொள்கின்றன. அதுவும் ஒரே நாளில் இரு படங்களும் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் - ஹன்சிகா நடித்துள்ள மாப்பிள்ளை படம் சன் டிவியின் வெளியீடு. வரும் ஏப்ரல் 8-ம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியிடுகிறது.
சிம்பு, அனுஷ்கா நடித்துள்ள வானம் திரைப்படத்தை விண்ணைத்தாண்டி வருவாயாவைத் தயாரித்த கணேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தையும் ஏப்ரல் 8-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
உலகக் கோப்பை முடிந்த பிறகு வரும் முதல் வெள்ளிக்கிழமை என்பதாலும், இதற்குப் பிறகு தேர்தல் நெருங்குவதாலும், இந்தத் தேதியை விட்டால் நல்ல சமயம் கிடைக்காது என தயாரிப்பாளர்கள் கருதுவதால், இருவரின் படங்களையும் மோதவிடுகின்றனர்.
இந்த இரு படங்களை விட முக்கியமான ஒரு படம் இதே தேதியில் வருகிறது. அது பாலா இயக்க, ஆர்யா - விஷால் நடித்துள்ள அவன் இவன் எந்தப் படம் வெல்லும் என்று இப்போதே பெட்டிங் ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கத்தில்!


Click it and Unblock the Notifications











