சீமான் கைது-மாயாண்டி குடும்பம் பிழைக்குமா?

By Staff

Mayandi Kudumbathar
பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசினார் என கைதாகியுள்ள சீமானால், அவர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்த மாயாண்டி குடும்பத்தார் படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.

பத்து இயக்குனர்களை வைத்து இராசு மதுரவன் இயக்கும் படம் மாயாண்டி குடும்பத்தார். இதில் மாயாண்டியாக மணிவண்ணன் நடிக்கிறார். அவரது மகன்களில் ஒருவராக சீமான் நடிக்கிறார்.

இந்தப் படப்பிடிப்புக்காக சீமான் வத்தலகுண்டு வந்தபோதுதான் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தில் சீமான் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்ல, பாடல் எழுதி பாடவும் செய்கிறார். எனவே அவருக்காக பல காட்சிகளை கூடுதலாக உருவாக்கியிருந்தார் இயக்குனர் இராசு மதுரவன்.

ஆனால் சீமானின் திடீர் கைது காரணமாக அந்தக் காட்சிகளை எப்படி எடுப்பது என திகைத்துப் போயுள்ளார் ராசு மதுரவன்.

காரணம் பல காட்சிகளில் சீமானுடன் நடிக்கவிருப்பவர்கள் பிரபல இயக்குநர்கள். அவர்களை ஒரே நேரத்தில் திரட்டுவதே பெரிய விஷயம். சீமானுக்காகக் காத்திருப்பதா அல்லது வேறு யாரையாவது வைத்து எடுப்பதா என யோசித்த இயக்குநர், இப்போதைக்கு காத்திருக்கலாம் என்றே முடிவு செய்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X