மே 1 முதல் மங்காத்தா

அஜீத்தின் 50வது படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்தில் முக்கியப் பாத்திரத்தில் அர்ஜூன் நடிக்கிறார். முதலில் இதில் நடிப்பதாக இருந்தவர் நாகார்ஜூனா. அவர் விலகிக் கொள்ளவே அந்த வேடத்தில் அர்ஜூன் நடித்துள்ளார்.
அல்டிமேட் ஸ்டாருடன், ஆக்ஷன் கிங் இணைவது இதுவே முதல் முறையாகும். படத்திற்குப் பெரும் பலமாக கருதப்படுவது யுவன் ஷங்கர் ராஜாவின் துள்ளல் இசைதான். படத்தின் 3 பாடல்களை ஏற்கனவே முடித்து விட்டனர். படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது.
அஜீத்துக்கு ஜோடியாக நடித்திருப்பவர் திரிஷா. படத்தில் லட்சுமி ராயும் உண்டு. அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தை மே 1ம் தேதி அஜீத்தின் பிறந்த நாளன்று வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.
More from Filmibeat
actor ajith தமிழ்த் திரைப்படம் மங்காத்தா நடிகர் அஜீத் மங்காத்தா மங்காத்தா திரைப்படம் mangatha movie tamil movie mangatha


Click it and Unblock the Notifications











