உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு
கமல்ஹாசன், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள மன்மதன் அம்பு திரைப்படம் இன்று உலகெங்கும் ரிலீஸானது.
உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, கமல்ஹாசன், திரிஷா, உஷா உதூப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது மன்மதன் அம்பு. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன. படத்திற்கான இசையை தேவிஸ்ரீபிரசாத் அமைத்துள்ளார். படத்தில் கமல்ஹாசன் எழுதி, திரிஷாவுடன் இணைந்து பாடிய பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அப்பாடலை கமல்ஹாசனே முன்வந்து நீக்கி விட்டார்.
இப்படி வெளியாவதற்கு முன்பு சலசலப்புடன் இருந்து வந்த மன்மதன் அம்பு இன்று உலகெங்கும் திரைக்கு வந்து சேர்ந்தது.
வழக்கமாக வெள்ளிக்கிழமையன்றுதான் புதிய படங்களைத் திரையிடுவார்கள். ஆனால் சற்று விசேஷமாக வியாழக்கிழமையே மன்மதன் அம்பு திரையிடப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications