மன்சூரும் இனி இசையமைப்பாளர்!

குரூப் டான்ஸராக வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் வில்லனாக உருவெடுத்து, காமெடி உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்து பின்னர் படத் தயாரிப்பாளர், இயக்குநர் என பல அவதாரம் எடுத்தவர் மன்சூர் அலிகான்.
இந்த நிலையில் புதிதாக இசையமைப்பாளர் அவதாரத்தையும் அவர் பூணுகிறார்.
என்னைப் பார் யோகம் வரும் படத்தைத் தொடர்ந்து கதை, பாடல்கள் மற்றும் ஹீரோ என மூன்று பொறுப்புகளுடன் மன்சூர் நடிக்கவுள்ள படம் கையில காசு, வாயில தோச.
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் ஆகிறார் மன்சூர். 5 பாடல்களைப் போடவுள்ளாராம். ஹமீதா இப்படத்தைத் தயாரிக்கிறார்.
முன்னணி நாயகி ஒருவரை ஹீரோயினாக நடிக்க கேட்டுள்ளனராம். அவர் இதுவரை பதில் ஏதும் சொல்லவில்லையாம். படத்தை இயக்குவது மணிவாசகன். டிசம்பர் 26 என்ற படத்தை இயக்கியவர்தான் இந்த மணிவாசகன்.
மன்சூர் அலிகான் ஸ்டைலுக்கேற்ப இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். நக்கல், நையாண்டி, அரசியல், கிளாமர் என சகல சரக்குகளையும் கலந்து கொடுக்கப் போகிறார்களாம்.
சமீபத்தில்தான் காமெடி நடிகர் கருணாஸ் இசையமைப்பாளரானார். இப்போது வில்லன் நடிகர் மன்சூர் இசைக்க வருகிறார். நல்ல மாற்றம்தான்.


Click it and Unblock the Notifications











