மெகா டிவியின் 'இந்த வார இந்தியா'

இந்திய முழுவதும் ஒரு வார காலத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளையும், சுவாரசியமான சம்பவங்களையும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் இந்த வார இந்தியா. வாரம் தோறும் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு மெகா டிவியில் ஒளிப்பரப்பாகிறது.
அரிய காட்சிகளும், வரலாற்றினை பிரதிபலிக்கும் பதிவுகளும், இந்த வார இந்தியா நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும். மெகா டிவியில் அனுபவமிக்க செய்திப் பிரிவினர் தயாரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை எளிய முறையில் தொகுத்து அளிப்பவர் சுதா பிரபுராம்.
விறுவிறுப்பான படத்தொகுப்பின் மூலம் வித்தியாசமான மொழி, நடையாலும் நேயர்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி தமிழ் தொலைகாட்சிகளில் முதன் முறையாக மெகா டிவியில் ஒளிப்பரப்பாகிறது என்பது குறிப்பிட்டதக்கது.
Comments


Click it and Unblock the Notifications