கருணாஸ் படத்தில் மிஷ்கின் பாட்டு

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வடக்கு நோக்கி யந்திரம் எனும் பெயரில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட படம்தான் இப்போது திண்டுக்கல் சாரதியாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் குசேலன் படத்தின் கதாசிரியர் சீனிவாசன் எழுதி நடித்த படம்தான் இந்த வடக்கு நோக்கி யந்திரம்.
திண்டுக்கல் சாரதிக்கு ஜோடியாக நடிக்கிறார் 'நம்நாடு' கார்த்திகா. இவர்களுடன் சரண்யா, லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், சண்முகராஜன், மனோபாலா, பெரியார்தாசன், மயில்சாமி, இளவரசு, சிட்டிபாபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.
டிரீம் டவர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சிவசண்முகம் இயக்குகிறார். ராம்நாத் வசனம் எழுத, தாஜ் ஒளிப்பதசிவு செய்கிரார். இசை-தினா.
திண்டுக்கல் மற்றும் காரைக்குடியில் கடந்த 40 நாட்களாகத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இன்னும் ஒரு பாடல் எடுக்க வேண்டும். அதை சென்னையில் செட் போட்டு எடுக்கத் திட்டம்.
இப்படம் குறித்து கருணாஸ் கூறுகையில், என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் இது. பொதுவாக ஒரு படத்துகு ஒரு வாரமோ பத்து நாட்களோ கால்ஷீட் கொடுப்பேன். ஆனால் இந்தப் படத்துக்குத்தான் மிக அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறேன்.
இது எனக்கு முற்றிலும் புது அனுபவம். எங்கெல்லாம் காமெடி வருகிறதோ அங்கெல்லாம் காமெடியனாகவும், மற்ற இடங்களில் அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்பவும் நடித்திருக்கிறேன். நல்ல பர்பார்மென்ஸூக்கு ஸ்கோப் உள்ள பாத்திரங்கள்தான் ஒரு நடிகனுக்கு முக்கியம். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்புதான் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்திருக்கிறது.
கிடைத்த வாய்ப்பைத் தவற விடாமல் சரியாகப் பயன்படுத்தியிருப்பதாக நம்புகிறேன். இந்தப் படத்துக்காக நிறையவே கஷ்டப்பட்டேன். அதற்கான பலன் படம் வெளியானால் நிச்சயம் கிடைக்கும். இந்தப் படத்தில் ஒரு பாடலை இயக்குநர் மிஷ்கின் பாடியிருக்கிறார்.
படத்தின் கதை ரொம்ப சிம்பிள். அழகான மனைவி எனக்கு. அவள் அழகுக்கு சற்றும் தகுதியில்லாத நான் தாழ்வு மனப்பான்மையில் செய்யும் எடக்கு மடக்கான சமாச்சாரங்கள்தான் படம். அனைத்துக் காட்சிகளிலுமே நகைச்சுவை கொப்பளிக்கும். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நான் ஸ்டாப் கொண்டாட்டமாக இருக்கும்..., என்றார் கருணாஸ்.
கருணாஸ், இதுவரை நல்லா 'கடிச்சீங்க', இப்படத்தில் நல்லா நடிங்க!


Click it and Unblock the Notifications











