'சைலன்ட்' ஆன 'ஜம்ப்' உமா!

By Staff

Pepsi Uma
பெப்சி உமா கலைஞர் டிவியை விட்டு விலகி விட்டார். இதுதான் டிவி உலகின் 'ஹாட் டாக்'.

சன் டிவியின் சாலிட் நிகழ்ச்சிகளில் ஒன்று உங்கள் சாய்ஸ். பெப்சி நிறுவனம் ஸ்பான்சர் செய்ததால் பெப்சி உங்கள் சாய்ஸ் என்று அறியப்பட்ட நிகழ்ச்சி. சன் டிவி தொடங்கப்பட்டது முதல் சில மாதங்களுக்கு முன்பு வரை ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் ஷோ.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உமா, நிகழ்ச்சியை விட ரொம்பப் பாப்புலராக இருந்தவர். பெப்சி உமா என ரசிகர்களால் செல்லமாகவும் அழைக்கப்பட்டார்.

கலைஞர் டிவி ஆரம்பித்தபோது, அது வீசிய வலையில், அலை அலையாக 'சன்'னிலிருந்து பலரும் சகட்டுமேனிக்கு கேம்ப் மாறியபோது உமாவும் அந்த ஜோதியில் ஐக்கியமானார். பரபரப்பாக எதையாவது செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் இப்போது சைலன்ட் ஆக கலைஞரிலிருந்து கழன்று கொண்டு விட்டாராம் உமா.

சன் டிவியில் செய்தது போலவே கலைஞர் டிவியிலும் தொலைபேசி மூலம் நேயர்களிடம் கதைக்கச் சொன்னது உமாவுக்குப் பிடிக்கவில்லையாம். வித்தியாசமாக எதையாவது செய்யலாமே என்று ஆலோசனை கூறியபோது, உங்களது ஸ்பெஷலே இந்த போன் இன் லைவ் நிகழ்ச்சிதான். எனவே இதையே செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அது உமாவுக்குப் பிடிக்கவில்லை. அரைத்த மாவையே அரைக்கப் பிடிக்காமல் நட்போடு கலைஞர் டிவிக்கு குட்பை சொல்லி விட்டாராம்.

இப்போதைக்கு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவில்லையாம். மறுபடியும் சன்னுக்குப் போவீர்களா என்று கேட்டால் வெறும் புன்னகையையே பதிலாக கொடுக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X