அனன்யா மீது இயக்குனர் சரமாரி புகார்

கொக்கி, லீ உள்ளிட்ட படங்களை இயக்கிவர் பிரபு சாலமன். தற்போது மைனா என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக நாடோடிகள் படப் புகழ் அனன்யாவை புக் செய்திருந்தார்.
சமீபத்தில்தான் நடிகர் ஆர்யா தயாரிக்கும் படித்துறை என்ற படத்தில் புக் ஆகி பின்னர் நீக்கப்பட்டார். இந்த நிலையில் மைனா படத்தில் நடிப்பதாக கூறியவர் இப்போது திடீரென விலகிக் கொண்டு பல லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக அனன்யா மீது பிரபு சாலமன் புகார் கூறியுள்ளார்.
மைனா படத்தில் புதுமுகம் ஒருவர் ஹீரோவாக நடிக்கிறார். கூத்துப்பட்டறைக் கலைஞர்கள் பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பத்தாம் தேதி தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில் அனன்யாவால் ஷூட்டிங் நின்று போய் விட்டதாம்.
இதுகுறித்து பிரபு சாலமன் கூறுகையில்,
மலையாளம் கலந்த தமிழ் பேசும் பெண் வேடம் என்பதால், அனன்யாவை சந்தித்து கதை சொன்னேன். தன் கேரக்டர் பிடித்திருந்தால் சம்மதித்தார். 4 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி, 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தேன்.
ஜூலை 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை கால்ஷீட் தந்த அவர், அக்ரிமென்ட்டில் கையெழுத்தும் போட்டார்.
மூணாறு, இடுக்கி, குரங்கனி போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஷூட்டிங் நடத்த லொகேஷன் தேர்வு செய்தேன். ஒரு பஸ்சை விலைக்கு வாங்கியிருந்தேன். எல்லா ஏற்பாடுகளும் நடந்த நேரத்தில், திடீரென்று அனன்யா நடிக்க மறுத்தார்.
காரணம் கேட்டபோது, மலையாளத்தில் திலீப் படத்தில் நடிக்க பழைய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக சொன்னார். அதைக் கூட முறைப்படி சொல்லவில்லை. அட்வான்சை திருப்பிக் கொடுத்து விட்டார்.
ஷூட்டிங் பாதித்து, நஷ்டம் ஏற்படும் அளவுக்கு அனன்யா நடந்துகொண்டது, நஷ்டம் ஏற்படும் என்று அனன்யாவும், அவரது அப்பாவும் பொறுப்பில்லாமல் நடந்துகொண்ட விதம் படக்குழுவினரை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. இனி வேறொரு ஹீரோயின் கிடைத்தால் மட்டுமே ஷூட்டிங் நடத்த முடியும் என்றார் பிரபு சாலமன்.
இதுகுறித்து இதுவரை அனன்யா தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் வரவில்லை.


Click it and Unblock the Notifications











