பாலிவுட்டில் பிரகாஷ் ராஜ் கலக்கல்!

பிரபு தேவா இயக்கத்தில் வெளியாகியுள்ள வான்டட் பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் முக்கிய வில்லனாக நடித்திருப்பவர் நம்ம ஊர் பிரகாஷ் ராஜ்.
தமிழ் மற்றும் தெலுங்கு போக்கிரி படத்தின் இந்திப் பதிப்புதான் வான்டட். தமிழ் தெலுங்கிலும் வில்லனாக நடித்தவர் பிரகாஷ்ராஜ்தான். தற்போது இந்தியிலும் அவரே வில்லனாகியுள்ளார்.
போக்கிரியில் அலி பாய் என்ற கேரக்டரில் நடித்திருந்த பிரகாஷ் ராஜ், இந்தியில், கனி பாய் என்ற பெயரில் நடித்துள்ளார். அவரது நடிப்புக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
இப்படத்துக்குக் கிடைத்துள்ள வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில், மீண்டும் திரைப்படங்களி்ல் ஹீரோ வெர்சஸ் வில்லன் டிரென்ட் தலை தூக்கும் என்று கூறியுள்ளார்.
பிரகாஷ் ராஜ் விதம் விதமான கேரக்டர்களில்நடிக்க ஆசைப்படுகிறாராம். அதேசமயம், கமர்ஷியல் படங்களிலும் நடிக்க அவர் தயக்கம் காட்டுவதில்லை.


Click it and Unblock the Notifications











