முழு நேர நடிகராக மாறிய தயாரிப்பாளர்!

பின்னர் பசங்க படம் வந்தது. யார் இந்த வாத்தியார்? என்று கேட்கும் அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஜெயப்பிரகாஷ். அதன்பிறகு பசங்க, நாடோடிகள், தில்லாலங்கடி, வம்சம், நான் மகான் அல்ல என நடித்த அத்தனை படங்களிலும் தனி முத்திரை பதித்தார்.
நடிகரான அனுபவம் பற்றி ஜெயப்பிரகாஷ் இப்படிச் சொல்கிறார்:
"தயாரிப்பாளர்கள் பலர் இப்போது நடிக்க துவங்கி உள்ளனர். பொற்காலம், நெறஞ்ச மனசு, தவசி, செல்லமே, ஜூலி கணபதி என பலபடங்கள் தயாரித்தேன். அப்போது நடிக்க யோசிக்கவில்லை. மாயக்கண்ணாடி படத்தில் சேரன் பிடிவாதமாக நடிக்க வைத்து விட்டார்.
லாடம், பசங்க, நாடோடிகள், தில்லாலங்கடி, வம்சம், நான் மகான் அல்ல படங்களில் நான் நடித்த கேரக்டர்கள் என்னை முழு நேர நடிகனாக்கி விட்டது.
குணசித்திரம், வில்லன் என வெவ்வேறு கேரக்டர்களில் நடிக்கிறேன். ஒரே மாதிரி நடித்தால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும். எனவே படத்துக்கு படம் வித்தியாசம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.
இயக்குனர் என்ன நினைக்கிறாரோ அதன்படி நடிக்கிறேன், இயக்குனரின் நடிகராக இருக்கவே விரும்புகிறேன்.
தயாரிப்பாளராக இருந்து பலருக்கு வேலை கொடுத்த நான் இப்போது நடிகனாகி விட்டேன். நடிகனாக பலரை ரசிக்க வைப்பது மகிழ்ச்சியான விஷயம்" என்றார்.


Click it and Unblock the Notifications











