சாய்மிராவின் 'சூப்பர் சுந்தரி'!

குழந்தைகளுக்கான பிரமாண்டமான மெகா தொடர் இது.
ஹீமேன், சூப்பர் மேன் மாதிரி, குழந்தைகளின் மனம் கவர வரும் பாத்திரப் படைப்பு இந்த சூப்பர் சுந்தரி.
ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கென எத்தனையோ ஸ்பெஷல் பாத்திரப் படைப்புகள் வந்திருந்தாலும், தமிழில் இப்படியொரு கேரக்டர் வருவது இதுவே முதல்முறை.
நகைச்சுவை, அதிரடி என இரண்டும் கலந்து மிரட்ட வருகிறார் இந்த சூப்பர் சுந்தரி. இந்த வேடத்தில் கலக்க வருபவர் உமா ரியாஸ். இவருடன் நளினி, பாலு ஆனந்த், சாம்ஸ், அரவிந்த், மாறன் மற்றும் பலரும் நடிக்கின்றனர்.
ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக இருந்து, துயரம் வரும் சமயம் புயலெனக் கிளம்பி பிரச்சினையைத் தீர்த்து வைப்பவள்தான் இந்த சூப்பர் சுந்தரி.
மோகன் இயக்கும் இத் தொடருக்கு தர்மராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கோபிநாத்தின் விறுவிறு திரைக்தையில், ரவிகுமாரின் வசனங்களில் உருவாகியிருக்கும் இத் தொடரின் கதாசிரியர் செந்தமிழன். கிரியேட்டிவ் ஹெட் சுபா வெங்கட்.
ஜூலை 16-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது இந்தத் தொடர்.


Click it and Unblock the Notifications











