ஆஸ்கருக்கு அருகில் ஏ.ஆர்.ரஹ்மான்!

By Staff

AR Rahman
ஸ்லம் டாக் .. 10 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை - ரஹ்மானுக்கு 3

ஆஸ்கர்... சாதாரண கலைஞன் தொடங்கி கமல் ஹாசன் வரை (வெளியே மறைத்தாலும்!!) ஒவ்வொரு இந்தியக் கலைஞனின் கனவு விருது அது.

அந்த விருதை இன்னும் சில தினங்களில் எட்டிப் பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் 'மெட்ராஸ் மொஸார்ட்'
என இசை ரசிகர்களால் கொணாடாடப்படும் 'நம்ம ரஹ்மான்'.

ஸ்லம்டாக் படம் 10 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரஹ்மானின் பெயர் 2 பிரிவுகளில் 3 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இதே படத்துக்காக கோல்டன் குளோப் விருது பெற்றுள்ள ரஹ்மானுக்கு இப்போது ஆஸ்கர் விருதும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பிரகாசமாகியுள்ளது.

சிறந்த ஒரிஜனல் ஸ்கோர் மற்றும் இரண்டு சிறந்த பாடல்களுக்கான பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது இந்தப்படம்.

பரிந்துரை செய்யப்பட்ட பிரிவுகள் விவரம்:

பெஸ்ட் ஒரிஜனல் ஸ்கோர் - ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த ஒரிஜினல் பாடல் 'ஜெய் ஹோ..' - ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த ஒரிஜினல் பாடல் 'ஓ சாயா…' - ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த படம் - ஏ காலண்டர் பிலிம்ஸ் புரடக்ஷன், கிறிஸ்டியன் கோல்சன்
சிறந்த ஒளிப்பதிவு - ஆன்டனி டோட்மென்டில்
சிறந்த அடாப்டட் திரைக்கதை - சைமன் பியூஃபோய்
சிறந்த எடிட்டிங் - கிறிஸ் டிக்கென்ஸ்
சிறந்த திரைப்பட எடிட்டிங் - கிறிஸ் டிக்கென்ஸ்
சவுண்ட் எடிட்டிங் - டாம் சேயர்ஸ்
சிறந்த இயக்குனர் - டானி பாய்ல்

ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியன்று நடைபெறுகிறது.

ஒரு இந்திய திரைக் கலைஞர் ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் புதிய சாதனை படைத்துள்ளார்.

தனது பெயரும், ஸ்லம்டாக் படமும் பெருமளவில் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில், எனது இசை இந்த அளவுக்கு பேசப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. எனது முதல் நன்றி குல்ஸாருக்குத்தான்.

நான் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன். இல்லாவிட்டாலும் ஏமாற்றமடைய மாட்டேன் என்றார்.

யுவன் ஷங்கர் ராஜா வாழ்த்து!

கோல்டன் குளோப் விருது பெற்று இந்திய சினிமாவை உலகத் தரத்துக்கு உயர்த்திய ஏஆர் ரஹ்மான், ஆஸ்கர் விருதுகளையும் வெல்வது நிச்சயம் என பாராட்டு தெரிவித்துள்ளார் இசைஞானி இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதை அவர் தெரிவித்தார்.

நாமும் மெட்ராஸ் மொசார்ட்டுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களைச் சொல்வோம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X