பத்து ரூபா டிக்கெட் கிடைக்கிறதில்லே..டிஆர்

மாளவிகா, சமிக்ஷா, விக்கிரமாதித்யா நடித்த கார்த்திகை என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விஜய டி ராஜேந்தர் பேசியதாவது:
கார்த்திகை படத்தின் பாடல்களை மார்கழித் திங்களில் வெளியிட அழைத்திருக்கிறார்கள். நட்புக்காக இந்த விழாவில் பங்கேற்கிறேன்.
இன்னைக்கு சினிமாவிற்கு தேவை யூத். பாக்யராஜ் முந்தானை முடிச்சு கொடுத்தப்போ, நான் தங்கைக்கோர் கீதம் கொடுத்தேன். அதெல்லாம் ஒரு பொற்காலம். பெண்கள் கூட்டம் கூட்டமா தியேட்டருக்கு வந்த காலம். இப்போ அவங்கல்லாம் டிவி முன்னாடி உட்கார்ந்திட்டாங்க.
இன்னொன்னு கட்டணம் அதிகம். பத்து ரூபாய் டிக்கெட்டே கிடைக்கிறதில்லே. அதனால பிரம்மச்சாரிகள்தான் பெரும்பாலும் தியேட்டருக்கு வராங்க. அவங்க பல்ஸ் தெரிஞ்சி எடுத்தாதான் இனி படம் ஓடும். அது ஆந்திராவாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி... இதுதான் நிலை என்றார்.
முன்னதாக இயக்குநர் கே.பாக்யராஜ், இசைத் தகடை வெளியிட அதை ராஜேந்தர் பெற்றுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











