உன்னைப் போல் ஒருவன் படத்தின் மியூசிக் வீடியோ- இயக்கினார் ஸ்ருதி

By Staff

Shruti Haasan
கமல்ஹாசன், மோகன்லால் இணைந்து நடித்துள்ள உன்னைப் போல் ஒருவன் படத்தின் மியூசிக் வீடியோவை உருவாக்கியுள்ளார் ஸ்ருதி ஹாசன். இந்த வீடியோவின் இணை இயக்குநரும் அவரே.

இந்தியில் முதன் முதலாக நடித்த லக், ஸ்ருதிக்கு பேட் லக் ஆக அமைந்தாலும் கூட அவர் அதைப்பற்றி கவலையே படாமல் அடுத்தடுத்த வேலைகளில் மும்முரமாகி விட்டார்.

தற்போது கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு இசையமைத்து வரும் ஸ்ருதி, தற்போது அப்படத்தின் மியூசிக் வீடியோவை உருவாக்கியுள்ளார். அதன் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்தியில் வெளியான ஏ வெட்னஸ்டே படத்தின் ரீமேக்தான் உன்னைப் போல் ஒருவன். தமிழ் மற்றும் தெலுங்கில் இது தயாராகிறது. தெலுங்குப் பதில் கமலுடன் வெங்கடேஷும், தமிழ்ப் பதிப்பில் கமல், மோகன்லாலும் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார் ஸ்ருதி.

மேலும், இப்படத்துக்காக தனியாக மியூசிக் வீடியோ ஒன்றையும் அவர் உருவாக்கியுள்ளார். வானம் எல்லை இல்லை என்ற ஹிப் ஹாப் பாடலும், ஈசியர் செட் தேன் டன் என்ற இன்னொரு பாடலும் இதில் இடம் பெற்றுள்ளது.

சர்வதேச புகழ் பெற்ற ராப் கலைஞர் பிளேஸ் இதில் இடம் பெற்றுள்ளார்.

இப்போது திரைப்படங்களைப் போலவே மியூசிக் வீடியோவும் பிரபலமாகி வருகிறது. ஒரு படத்தைப் பிரபலப்படுத்தும் முகமாக அதுகுறித்த இசை வீடியோவை வெளியிடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், உன்னைப் போல் ஒருவனின் மியூசிக் வீடியோவை உருவாக்கியுள்ளார் ஸ்ருதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X