ஸ்லம்டாக்... சவுன்டிராக் விருதுக்குப் பரிந்துரை

மொத்தம் 3 பிரிவுகளில் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றுமே ஏ.ஆர்.ரஹ்மானுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த ஒரிஜினல் பாடல் (திரைப்படத்துக்காகவே எழுதப்பட்ட பாடல்) உள்ளிட்ட 3 பிரிவுகளில் இந்த விருதுக்கு ஸ்லம்டாக் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ரஹ்மானின் பெயர் இடம் பெறவில்லை.
ஸ்லம்டாக் மட்டுமே இந்த விருதுகளுக்காக அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே படம் என்பது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியம் நாட்டின் கென்ட் என்ற நகரில் நடைபெறும் கோலாகல விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
தற்போது நடந்து வரும் கென்ட் சர்வதேச திரைப்பட விழா அக்டோபர் 17ம் தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் விருதுகள் அறிவிக்கப்படும்.
இதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குறைந்தது 2 விருதுகள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications











