தமிழிலும் ஸ்லம்டாக் மில்லியனர் ரிலீஸாகிறது!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் லண்டனைச் சேர்ந்த டேனி பாய்லே இயக்கியுள்ள படம் ஸ்லம்டாக் மில்லியனர்.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கோல்டன் க்ளோப் விருது விழாவில் இப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ரஹ்மானுக்குப் பெற்றுத் தந்தது.
அத்துடன் சிறந்த படம், இயக்குனர், திரைக்கதை ஆகிய பிரிவுகளிலும் இப்படம் கோல்டன் குளோப் விருதுகளை தட்டிச் சென்றது. இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியது.
இப்படம் இந்தியா முழுவதும் இன்று திரைக்கு வருகிறது. ஆங்கிலத்தில் இப்படம் உள்ளதால் இதை தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்துள்ளனர். தமிழில் நானும் கோடீஸ்வரன் என தலைப்பு வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கில் இப்படத்துக்கான டப்பிங் உரிமையை பால்கான் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.
தமிழுக்கு மட்டும் ரூ. 70 லட்சத்துக்கு டப்பிங் உரிமையை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் டப்பிங்குடன் பிப்ரவரி 6-ம் தேதி ரிலீஸ் ஆகிறது நானும் கோட்டீஸ்வரன்.


Click it and Unblock the Notifications