ஷகீலாவுக்கு சம்மன்!

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பாளையங்கோட்டையில், உள்ள ஒரு தியேட்டரில் ஷகீலா நடித்த இளமைக் கொண்டாட்டம் என்ற படம்திரையிடப்பட்டிருந்தது.
இந்தப் படத்தில் ஷகீலாவின் ஆபாசக் காட்சிகள் இணைக்கப்பட்டு ஓடுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் மாறுவேடத்தில் சென்று படத்தைக் கண்காணித்தனர்.
அப்போது ஷகீலாவின் ஆபாச பிட் காட்சிகள் ஓட்டப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் ஆபாசப் படச் சுருளைக் கைப்பற்றினர். இதையடுத்து ஷகீலா, அவருடன் நடித்திருந்த நடிகர் திணேஷ், தியேட்டர் மேலாளர் பாஸ்கரன், ஆபரேட்டர் பரமசிவம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதில் பாஸ்கர் தலைமறைவாகி விட்டார். மற்றவர்கள் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால் ஷகீலா மட்டும் இதுவரை ஆஜராகவில்லை.
இந்த நிலையில், வருகிற செப்டம்பர் 26ம் தேதியன்று ஷகீலா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் ஜெசிந்தா மார்ட்டின் உத்தரவிட்டார். அதேசமயம், பாஸ்கரனைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











