திண்டுக்கல் சாரதி-ஹாட்ரிக் அடித்த சன் பிக்சர்ஸ்!

இந்த மைனஸை ப்ளஸ் ஆக்கி வெற்றி மேல் வெற்றியை ருசிக்கத் துவங்கியுள்ளது புதிதாக திரைப்படத் துறைக்குள் அடியெடுத்து வைத்துள்ள சன் பிக்சர்ஸ்.
அடுத்தடுத்து மூன்று மாதங்களில் மூன்று சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட்டு அவற்றை வெற்றிப் படங்களாக்கி சாதனைப் படைத்திருக்கிறது இந்த நிறுவனம்.
ஆறு மாதங்களுக்கு முன்புதான் சன் பிக்சர்ஸ் தொடங்கப்பட்டது.
எடுத்த எடுப்பில் பெரிய தயாரிப்பில் இறங்காமல், ஏற்கெனவே தயாரிப்பிலிருக்கும் அல்லது நிதி தேவைக்காக தடுமாறிக் கொண்டிருக்கும் படங்களாகப் பார்த்து வாங்கியது. அப்படி வாங்கப்பட்டவைதான் காதலில் விழுந்தேன், தெனாவட்டு, பூக்கடை ரவி, தீ, திண்டுக்கல் சாரதி போன்றவை.
முதல் படமாக காதலில் விழுந்தேனை இரு மாதங்களுக்கு முன் வெளியிட்டது. படம் சுமார் என்று பேசப்பட்டாலும், சன் நிறுவனத்தின் வியாபார உத்தி மற்றும் அதிரடி விளம்பரங்கள் படத்தை சூப்பர்ஹிட் ஆக்கியது. திரையுலகமே இந்த வெற்றியை அண்ணாந்து பார்த்தது.
அடுத்த படம் ஜீவா நடித்த தெனாவட்டு. இதுவும் ஹிட்தான். காரணம் சன் நெட்வார்க்கின் பிரமிக்க வைக்கும் உழைப்பு. பி, சி சென்டர்களில் இன்னமும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.
இரண்டுமே கோலிவுட் எதிர்பார்க்காத பெரிய வெற்றிகள். இப்போது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்துள்ளது திண்டுக்கல் சாரதி.
கருணாஸ் நடித்த மீடியம் பட்ஜெட் படமான இது, சமீபத்தில் ரிலீசான எல்லாப் படங்களையும் 'ஜஸ்ட் லைக் தட்' ஓரம் கட்டியுள்ளது.
ரொம்ப நாள் கழித்து பாக்யராஜ் படம் பார்த்த மாதிரி ஒரு உணர்வை இந்தப் படம் கொடுத்துள்ளது என்கிறார் நடிகர் லிவிங்ஸ்டன்.
இந்தப் படத்தின் மூலம் நாயகனாக பதவி உயர்வு பெற்றுள்ள கருணாஸ் கூறுகையில், 'இந்தப் படம் குறைந்தபட்ச வெற்றியைப் பெறும் என்று நம்பித்தான் நடிக்கத் துவங்கினேன். ஆனால் சன் நிறுவனம் இதை வாங்கிய உடனே, நான் மட்டுமல்ல, அனைவருமே படத்தின் வெற்றி குறித்து தெளிவாக நிச்சயித்துக் கொண்டோம்.
இன்று தமிழகமெங்கும் அரங்கு நிறைந்து இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கிறதென்றால் அதற்கு சன் நிறுவனம்தான் முக்கிய காரணம். நல்ல படமெடுப்பது மட்டும் முக்கியமல்ல... அந்தப் படத்தை நல்ல முறையில் போய் சேர்க்கணும். இந்த உத்தி சன்னுக்கு மட்டும்தான் நன்கு தெரிந்துள்ளது. அதுதான் இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணம் என்றார்.


Click it and Unblock the Notifications











