காதல் கதை... வேலு பிரபாகரன் எதிர்பாராத 'ஜாக்பாட்'!

By Staff

Kadhal Kadhai
ரூ.1.35 கோடியில் எடுக்கப்பட்ட வேலு பிரபாகரனின் காதல் கதை படம், யாரும் எதிர்பாராத வகையில் ரூ.4 முதல் 5 கோடி வரை வசூலைக் கொடுக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளாக சென்சாரில் சிக்கி படாத பாடுபட்டுக் கொண்டிருந்தது காதல் கதை. இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் சூட்டப்பட்ட பெயர் காதல் அரங்கம். இளையராஜா இசை.

படத்தின் பல காட்சிகள் கிட்டத்தட்ட ஆபாசப் பட ரேஞ்சுக்கு இருப்பதாகக் கூறிய சென்சார் அதிகாரிகள், படத்துக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

குறிப்பாக முழு நிர்வாணக் காட்சிகள் இரண்டு இந்தப் படத்தின் அப்போது இடம்பெற்றிருந்தன. பின்னர் சென்சார் அதிகாரிகள் கண்டித்ததால் இந்தக் காட்சிகளை சற்று மாற்றி எடுத்தார் வேலு பிரபாகரன். பின்னர், மேலும் ஆட்சேபம் தெரிவிக்கப்படவே, வேறு வழியின்றி படத்தின் தலைப்பை வேலு பிரபாகரனின் காதல் கதை என மாற்றிவிட்டார்.

படத்தின் பல காட்சிகளை மறுபடியும் எடுத்தததாக் கூறும் பிரபாகரன், சில அரை நிர்வாணக் காட்சிகளை மட்டும் நீக்காமல் பிடிவாதமாக வைத்துள்ளார் படத்தில்.

இப்போது அந்தக் காட்சிகள்தான் படத்தைத் தூக்கி நிறுத்த உதவியுள்ளனவாம்.

தமிழ் சினிமாவில் இதுவரை இப்படியொரு செக்ஸ் படம் வந்ததில்லை என்று பலரும் பகிரங்கமாகவே பேசும் அளவுக்குதான் இந்தப் படத்தின் தரம் உள்ளது. ஆனாலும் 'காதல் கதை' 65 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. சராசரி படம் என்று தெரிந்தும், 'அந்த சில காட்சிகளு'க்காக இளைஞர்கள் கடமை உணர்ச்சியுடன் திரண்டு வருகிறார்களாம்.

வெறும் ரூ.1.35 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், இப்போது நல்ல வசூலுடன் ஓடுவதாகச் சொல்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த சில நாட்களில் 4 முதல் 5 கோடி ரூபாய் தேறிவிடும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X