பி.வாசுவின் தமிழ் 'பாஸிகர்'!

1991ம் ஆண்டு ஹாலிவுட்டைக் கலக்கிய படம் ஏ கிஸ் பிஃபோர் டையிங். மிகப் பெரும் ஹிட்டான அப்படத்தை தழுவி, ஷாருக் கான், கஜோல், ஷில்பா ஷெட்டி, தலிப் தஹில் ஆகியோர் நடிப்பில், அப்பாஸ்-மஸ்தான் இயக்கத்தில், 1993ம் ஆண்டு வெளியான படம்தான் பாஸிகர்.
இப்படம் ஷாருக்கானை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. பாடல்களும், ஷாருக்கானின் நடிப்பும் இந்தி ரசிகர்களை பாஸிகர் பைத்தியமாக்கி அலைய வைத்தன.
இந்த நிலையில் பாஸிகர் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார் பி.வாசு. தனது மகன் ஷக்திக்கு ஏற்றம் தரும் கதை இது என்று அவர் மிகவும் நம்புகிறார்.
குசேலன் படத்தை முடித்த பின்னர் பாஸிகர் ரீமேக்குக்கு வருகிறார் வாசு. படத்தின் இதர கலைஞர்கள் குறித்து இன்னும் அவர் தீர்மானிக்கவில்லை.
2007ம் ஆண்டு வாசு இயக்கத்தில் வெளியான தொட்டால் பூ மலரும்தான் ஷக்தியின் முதல் படம். இருப்பினும் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனாலும், அழகான ஹீரோ என்ற அளவில் தேறியிருந்தார் ஷக்தி. பாஸிகர் அவருக்கு ஏற்றம் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











