எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் நான்கு படங்கள்!
இந்த வாரம் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே முக்கியமான வாரம். நான்கு முக்கிய படங்கள் வெள்ளித் திரையை முத்தமிடுகின்றன, வரும் வெள்ளியன்று.
இந்த நான்குமே ரசிகர்களாலும், வினியோகஸ்தர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுபவை.
ரேணிகுண்டா:
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் இந்தப் படம் இருந்தது. ஆனால் ஆடியோ வெளியீட்டு விழாவில் காட்டப்பட்ட காட்சிகள் மற்றும் பாடல், 'இந்தப் படத்தில் ஏதோ பண்ணியிருக்காங்கப்பா' என யோசிக்க வைத்துவிட்டது. பாடல்களும் ஓகே ரகம்.
யோகி:
அமீர் முதல் முதலாக நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஒரு வருடம் படப்பிடிப்பு நடந்தது. சுப்பிரமணியம் சிவா இயக்கியிருக்கிறார். படத்தின் திரைக்கதை அமீரே என்பதால், இது அமீர் படம் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. அதை நிறைவேற்றும் விதத்தில் படமும் சிறப்பாக வந்துள்ளதால், ஹாட் கேக்காக விற்றுவிட்டது படம். அமீர் சில ஏரியாக்களில் சொந்தமாகவும் ரிலீஸ் பண்ணுகிறார்.
மத்திய சென்னை:
சென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். பிரகாஷ்ராஜ் இந்தப் படத்தில் ஒரு இயக்குநராக நடித்துள்ளார். இளையராஜா இசை என்றதும் படத்துக்கு ஒரு தனி கவனம் கிடைத்திருக்கிறது.
நான் அவனில்லை-2:
மார்க்கெட் டல்லடித்துள்ள ஜீவன்தான் நாயகன். அவருக்கு லட்சுமிராய், சங்கீதா, ஹேமமாலினி உள்ளிட்ட 5 நாயகிகள். முதல் பாகத்துக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து இந்த இரண்டாவது பகுதியையும் அதே பெயரில் எடுத்துள்ளார். தமிழில் இரண்டாம் பாகம் வரும் படங்கள் ரொம்ப ரொம்ப குறைவு. இந்தப் படம் வென்றால் இதே ஸ்டைலில் நிறைய படங்கள் வரக்கூடும்.


Click it and Unblock the Notifications











