துபாய் திரைப்பட விழாவில் நந்திதா-அபிஷேக்

டிசம்பர் 11 முதல் 18 வரை ஒரு வார காலம் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் 66 நாடுகளைச் சேர்ந்த 181 படங்கள் திரையிடப்படுகின்றன.
16 உலகத் திரைப்படங்களின் பிரிமியர் ஷோ இங்கே பிரமாண்ட முறையில் காட்டப்பட உள்ளது.
நிகோலஸ் கேஜ், கோல்டி ஹேயக், பிரண்டன் பிரேஸர் போன்ற ஹாலிவுட் பிரபலங்கள் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
இவர்களுடன் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன் மற்றும் நந்திதாவும் விழாவில் பங்கேற்கின்றனர்.
மதினத் ஜூமெரா ஹோட்டலில் நடக்கும் இந்த விழாவின்போது நடைபெறும் பிரமாண்ட இரவு விருந்தில் அனைத்து நட்சத்திரங்களும் ஒரு சேரப் பங்கேற்கிறார்கள்.
கடந்த ஆண்டு திரைப்பட விழாவின் போது இதே போன்றதொரு விருந்தின் மூலம் 3 மில்லியன் டாலர் வசூலானது. இந்த முறை இதைத் தாண்டுமளவு வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications