நடிகை ரூபஸ்ரீ கணவர் தற்கொலை

பல தமிழ், மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளவர் ரூபாஸ்ரீ. இப்போது வாய்ப்புகள் இல்லாமல் டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த தினேஷ் (வயது 30) என்பவருக்கும் மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்தார்.
ரூபஸ்ரீ சென்னையிலும் தினேஷ் தனது பெற்றோர்களுடன் நாமக்கல்லிலும் வசித்து வந்தனர்.
இந் நிலையில் நேற்று முன்தினம் ரூபாஸ்ரீயுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த தினேஷ் படுக்கை அறைக்குள் நுழைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கெண்டார்.
இது குறித்தி போலீசார் நடத்திய விசாரணையில் தினேஷ், தொழில்ரீதியாக பலரிடம் கடன் வாங்கியதும் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வந்ததும் தெரியவந்துள்ளது.
கணவர் இறந்தது அறிந்த ரூபஸ்ரீ நாமக்கல் வந்தார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
Comments


Click it and Unblock the Notifications