சென்சார் ஆனது தசாவதாரம்-யு சான்றிதழ்!

கிட்டத்தட்ட ரூ. 70 கோடியை விழுங்கி விட்டு பிரமாண்டமாக உருவாகி நிற்கிறது தசாவதாரம். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 2 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வந்தது. எப்போது வரும் என்று ஏங்கிக் கொண்டிருந்த திரைப் பிரியர்களுக்கு விருந்து படைக்க தசாவதாரம் ரெடியாகி விட்டது.
படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்து விட்டது. யு சான்றிதழ் கிடைத்துள்ளது. கமல்ஹாசனின் நடிப்பையும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் திறமையான இயக்கத்தையும் தணிக்கை வாரிய உறுப்பினர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
பல காட்சிகள் பிரமிப்பாகவும், அற்புதமாகவும், அபாரமாகவும் இருப்பதாக தணிக்கை வாரிய உறுப்பினர்கள் புகழந்துள்ளனர்.
படம் மொத்தம் 2 மணி நேரம் 46 நிமிடங்களுக்கு ஓடும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளது. ஹாலிவுட் தரத்துடன் கிராபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எபக்ட்ஸ் வேலைகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து உறுப்பினர்களுமே, கமல்ஹாசனின் 10 வேடங்களையும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். ஒரு உறுப்பினர் கூறுகையில், சந்தேகமே இல்லாமல், இது கமல்ஹாசனின் மாஸ்டர் பீஸ். இப்படிப்பட்ட ஒரு படத்தைப் பார்த்தது எங்களைப் போன்ற தணிக்கை வாரிய உறுப்பினர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம். மிகவும் அசாதாரணமாக நடித்துள்ளார் கமல் என்று பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











