ஆர்யா, சூர்யா, ஜீவா படங்கள்... வெற்றிமாறன் காட்டுல மழை!
கோடம்பாக்கத்தின் அடுத்த பிஸி இயக்குநராக மாறியிருக்கிறார் வெற்றிமாறன். பொதுவாக முதல் படத்தை வெற்றிகரமாகத் தரும் புதிய இயக்குநர்கள், இரண்டாவது படத்தில் சறுக்கிவிடுவார்கள். மூன்றாவது அல்லது நான்காவது படங்களில் எழுவார்கள்.
ஆனால் சிலர் மட்டும்தான் இரண்டாவது படம் என்ற பரீட்சையிலும் தேறுவார்கள். அவர்களில் வெற்றி மாறனும் ஒருவர். முதல் படம் பொல்லாதவன் நல்ல வெற்றிப் படம். அடுத்த படமான ஆடுகளம், வசூலில் மந்தமாக இருந்தாலும், தரத்தில் பெரிய அளவு பாராட்டுக்களைக் குவித்துள்ளது. திரைப்பட விழாக்களிலும் பங்கேற்கத் துவங்கியுள்ளது.
இப்போது சூர்யா, விக்ரம், ஆர்யா என முன்னணி நடிகர்களை கூப்பிட்டு கால்ஷீட் தரும் அளவுக்கு படு பிஸி.
ஆனாலும் தனக்கு முதல் இரு படங்களின் வாய்ப்பையும் தந்த தனுஷுக்கு முன்னுரிமை தர விரும்புகிறார் வெற்றிமாறன்.
சூர்யாவுக்கும் கதை சொல்லியிருக்கிறாராம். இன்னொரு படத்தில் கார்த்தியையும் ஆர்யாவையும் இணைக்க விரும்பியுள்ளார். ஆனால் நடித்தால் சோலோவாகத்தான் நடிப்பேன் என கதையைக் கேட்ட பிறகு கார்த்தி அடம்பிடிக்க, அந்த வாய்ப்பை கேட்டு வாங்கிக் கொண்டாராம் ஜீவா.
ஆக அடுத்த ஆண்டு வரை வெற்றி மாறன் டைரி ஃபுல்!


Click it and Unblock the Notifications











