இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

By Chakra

இந்த வாரம் கோடம்பாக்கத்தில் ரிலீஸ் ஆன படங்கள் அத்தனையும் இயக்குநர்கள் ஹீரோவாக நடித்த படங்களே... அதுவும் அவர்களே இயக்கி, அவர்களே நடித்த படங்கள்.

சுந்தர் சி இயக்கி, அனுயாவுடன் ஜோடி போட்டு நடித்த படம் நகரம். கடந்த வாரம் வெளியானது. வடிவேலு - சுந்தர் சி காம்பினேஷன் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் என்பதை நிரூபித்துள்ளது.

அடுத்த படம் கரு பழனியப்பன் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ள மந்திரப் புன்னகை. மீனாட்சி அவருக்கு ஜோடி. மனநிலை பிறழ்ந்த பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தையும் ஒரு காமெடியன்தான் ஓரளவுக்கு காப்பாற்றினார் என்று சொல்ல வேண்டும். அவர் சந்தானம்!

மூன்றாவது படம் மகிழ்ச்சி. குடும்பக்கதை என்ற பெயரில் பிழியப் பிழிய எல்லாரும் அழுது கொண்டே இருக்கும் படம். அஞ்சலிதான் ஹீரோயின். இன்னொரு ஹீரோ என்று சொல்லிவிட்டு, சீமானை துண்டு ரோலில் காட்டி நாம் தமிழர் இயக்கத்தினரை கடுப்படித்திருந்தார் கவுதமன்.

இந்த மூன்றும் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்கள். இந்த மூன்றில் மகிழ்ச்சி, நகரம் படங்களில் லிப் டு லிப் கிஸ் வேறு உண்டு. கவுதம் அஞ்சலி உதட்டையும், சுந்தர் சி அனுயாவின் உதட்டையும் பதம் பார்த்திருந்தனர். கரு பழனியப்பன் பெரிய மனது பண்ணி விட்டுவிட்டார் போலிருக்கிறது!

வரும் வாரம் வெளியாகும் படமும் இயக்குநரே ஹீரோவாக நடித்திருப்பதுதான். அது நந்தலாலா. இயக்குநர் கம் ஹீரோ மிஷ்கின்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X