15 பேரில் ஒருவராகக் கூட தேறாத ஏக்தா செளத்ரி!

By Staff

பஹாமஸ்: மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் இம்முறை இந்தியாவின் ஏக்தா நிச்சயம் கிரீடம் சூடுவார் என்ற இந்தியர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்து விட்டது.

கடைசியாக இந்தியாவுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர் லாரா தத்தா. பத்து ஆண்டுகளாகி விட்டது லாரா மிஸ் யுனிவர்ஸ் ஆகி.

இந்த நிலையில் இம்முறை ஏக்தாவுக்கு பஹாமஸில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அவருக்கு பட்டம் கிடைப்பது உறுதி என்ற நம்பிக்கை வலுத்தது.

இதற்காக ஏக்தா செளத்ரி கடுமையாக தயாராகி வந்தார். மிகுந்த நம்பிக்கையுடனும் இருந்தார். ஆனால் கடைசி 15 பேரில் ஒருவராகக் கூட தகுதி பெறாமல் தோல்வியுற்றுள்ளார் ஏக்தா.

சுஷ்மிதா சென் உலக அழகிப் பட்டம் வென்றபோது ஏக்தாவுக்கு 8 வயதாம். சுஷ்மிதாவுக்குக் கிடைத்த பெயரும், புகழும் அவரை நானும் ஒரு நாள் உலக அழகி ஆவேன் என்ற வைராக்கியத்தைப் பூண வைத்ததாம். அந்த வாய்ப்பு பஹாமஸ் போட்டி மூலம் கிடைத்ததைத் தொடர்ந்து மிகுந்த நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பட்டம் வெல்ல காத்திருந்தார். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

கடைசி 15 பேரில் ஒருவராகத் தகுதி பெறாதது மட்டுமல்ல, வேறு எந்தப் பிரிவிலும் ஏக்தாவுக்குப் பரிசு கிடைக்கவில்லை என்பதும் அவரை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X